சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் ஏப்ரல் 12 தொடக்கம் மே 3 வரை நடைபெறவுள்ள ஊடகச்செயலமர்வில் பங்கு பற்றுவதற்காகவே இக்குழு சீனா செல்கின்றது.
சீனா மக்கள் குடியரசின் திரைப்படம் மற்றும் தொiலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, வானொலி சேவை மற்றும் ஆராய்ச்சி நிர்வாகமே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஊடகவியலாளர் குழுவை வழிநடத்தி செல்ல தேர்வாகியுள்ள பிரபல ஊடகவியலாளர் சியாவுல் ஹஸன் ஊடகத்துறையில் 20 வருட அனுபவம் பெற்றவர். இவர் சக்தி தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக ,பின்னர் தயாரிப்பு முகாமையாளராக கடமை புரிந்த காலத்தில 'சக்தி சூப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சூப்பஸ்டார், 'இசை இளவரசர்கள்' போன்ற ஜனரஞ்சக நிகழ்ச்சி தயாரித்து வழங்கியவர்.
தேசிய தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் இவர் இருபதுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ஆர்யா பங்கு பற்றும் 'எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை யாழ்மண்ணில் நெறிப்படுத்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சிப் பட்டறையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி ,வசந்தம் தொலைக்காட்சி, சிரச தொலைக்காட்சி , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ,கெப்பிட்டல் வானொலி ஆகிய இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களே பங்கு கொள்கின்றனர். இந்த செயலமர்வில் பங்கு பற்றும் ஊடகவியலாளர்களில் 4 பேர் தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.