மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

க.கிஷாந்தன்-லையகத்தில் 07.04.2018 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெய்த அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று 08.04.2018 அன்று திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீண்டநாள் வரட்சியின் பின் நீரேந்தும் பிரதேசங்களுக்கு கன மழை பெய்ததனால் ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளது.
இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -