கல்முனையில் புத்தாண்டு சிறப்பு சித்திரை விளையாட்டு விழாக்கள்.!

காரைதீவு நிருபர் சகா-
பிறக்கும் விளம்பி வருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சிறப்பு சித்திரை கலாசார விளையாட்டு விழாக்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்முனை நியு ஸ்டார் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகள்!
கல்முனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 34 ஆவது ஆண்டு பூர்த்தியையும் சித்திரைப் புத்தாண்டையும் முன்னிட்டு கல்முனை மாநகரில் எதிர்வரும் சித்திரை 13 14 15 ஆகிய திகதிகளில் மூன்று நாட்கள் பிரமாண்டமாக சித்திரை களியாட்ட நிகழ்வினை நடாத்தவுள்ளது.

நிகழ்வுகளhக 13 ஆம் திகதி காலை 6 மணிக்கு சைக்கிள் ஓட்டம் 14 ஆம் திகதி மாலை 4 மணிக்கு சிறுவர் களியாட்ட நிகழ்வுகள் 15 ஆம் திகதி காலை 6 மணிக்கு மரதன் ஓட்டம்
15 ஆம் திகதி பி.ப 2 மணிக்கு சித்திரை களியாட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறும்.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்துசிறப்பிப்பார் என கழகமுன்னாள் தலைவரும் இந்நாள்போசகரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

அதேவேளை 15 ஆம் திகதி மாலை 7 மணிக்கு பரிசளிப்பு நிகழ்வும் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

வெள்ளி விழாகாணும் எவரெடியின் சித்திரை கொண்டாட்டம்!

வெள்ளி விழா காணும் கல்முனை எவரெடி கழகத்தின் வெற்றித்திருவிழாவும் சித்திரை கொண்டாட்டமும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டும் எவரெடியின் 25ம் வருட பூர்த்தியையும் கொண்டாடுமுகமாக கல்முனை மாநகரில் சித்திரை மாதம் 28 29 30 திகதிகளில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

28ம் திகதி மரதன் ஓட்டப்போட்டியும் மைதான நிகழ்வுகளும் 29ம் கார்னிவேல் மற்றும் களியாட்ட நிகழ்வுகளும் 30ம் திகதி சைக்கிள் ஓட்டப்போட்டியும்மாலை பரிசளிப்பு நிகழ்வும் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
பாண்டிருப்பு விஷ்ணு இளைஞர் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வுகள்!
பாண்டிருப்பு விஷ்ணு இளைஞர்கள் கழகம் 11 ஆம் ஆண்டு நிறைவையும், சித்திரை புத்தாண்டையும் சிறப்பிக்கும்முகமாக விளையாட்டு போட்டிகளையும் களியாட்ட, கானிவெல் நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தவுள்ளனர்.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை பாண்டிருப்பு கடற்கரை திறந்த வெளி அரங்கில் தினமும் மாலை 3.00 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் விளையாட்டுப் போட்டிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள், தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்கள், களியாட்ட நிகழ்வுகள், வினோத விளையாட்டுக்கள் என சிறப்பாக நடைபெறவுள்ளதால் அ னைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விஷ்ணு இளைஞர் கழகம் அழைக்கின்றனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -