மேயர் கதிரையில் அமராது கணக்குப் பிரிவில் கதிரை தேடும் கல்முனையின் புதிய மேயர்!



 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
ழல், மோசடிகள் மலிந்து போன கடந்த கால கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தின் போது அதன் கணக்குப் பிரிவில் (Accounts Department) இடம்பெற்ற மோசடிகள் தற்போது அம்பலமாகியுள்ளன. விசேடமாக, எனது தம்பி நிசாம் காரியப்பர் காலத்தில்தான் கல்முனை மாநாகர சபையில் அதிகளவில் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், மேயர் உடையணிந்து உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர மறுத்துள்ள புதிய மேயர் சட்டத்தரணி ரக்கீப் அவர்கள், கணக்குப் பிரிவில் (Accounts Department) கதிரை போட்டு அமர்ந்து ஊழல்களைக் கண்டுபிடிக்கப் போகும் முயற்சியில் ஈடுபடப் போகிறார். புதிய மேயரின் துணிச்சல், தூய்மை, மனவலிமையைப் பாராட்டுகிறேன்.
அதேவேளை,மாநகர சபை வாகனத்தைப் பயன்படுத்தாது சொந்த வாகனத்தைப் பயன்படுத்தவும் சொந்தச் செலவில் பெற்றோல் நிரப்புவும் நீங்கள் எடுத்துள்ள முடிவையும் ஓரளவே பாராட்டுவேன். ஏனெனில், உங்கள் அந்தஸ்துக்கு உரிய உரிமைகளை துஷ்பிரயோகமற்ற முறையில் பயன்படுத்துவதில் தவறில்லையே?
கடந்த காலத்தில் கல்முனை மாநகர சபையானது அந்தப் பிரதேசத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதான, திருப்தி தரும் எந்த அபிவிருத்திப் பணியையும் செய்யவில்லை. ஆனால், தாராளமாக அபிவிருத்தி செய்யப்பட்டதற்கான கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் மக்கள் வரிப்பணத்தில் நன்கு அபிவிருத்தியடைந்தவர்களில் கல்முனை மாநகர சபையின் கணக்குப் பிரிவிலும் (Accounts Department) நிறையப் பேர் உள்ளனர்.
எனது தம்பி நிஸாம் காரியப்பர் காலத்திலேயே ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகங்கள் கல்முனை மாநகர சபையில் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து இந்தளவு கீழ்மட்ட நிலைமைக்கு கல்முனை மாநகர சபை வந்தது..
புதிய மேயர் அவர்களே! உங்களது ஆட்சிக் காலத்தின் முதலாவது ஆண்டை பிரதேச அபிவிருத்திக்காக அல்லாது கல்முனை மாநகர சபையிலுள்ள பெருச்சாளிகளையும் கடந்த கால மோசடிகளையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒதுக்கி விடுங்கள். இந்த நல்லாட்சியில் நடக்காதவற்றை உங்களது கல்முனை ஆட்சியிலாவது செய்து காட்டுங்கள்.

ஊழல், மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்து அவர்கைளைத் தண்டிப்பதுடன் அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும் உங்களது கடமை. நிச்சயம் இவைகளை நீங்கள் செய்யக் கூடியவர்.
ஆனால், சிலவேளைகளில் இவ்வாறான விடயங்களில் உங்களை உங்களாலேயே பாதுகாக்க முடியாத நிலைமையும் ஏற்படலாம் என நான் அச்சமடைகிறேன். இவ்வாறான நல்ல விடயங்களை நீங்கள் முன்னெடுக்கும் போது உங்களுக்கு கைவிலங்கிடப்படலாம். அல்லது கதிரையிலிருந்து வெளியேற்றப்படலாம். யார் அவ்வாறு செய்வார்கள் என்பதனை நான் கூறித் தெரிந்த கொள்ளும் தேவை உங்களுக்கு இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -