சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புதுவருட கொடுக்கல் வாங்கலினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம். மனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதுவருட கொடுக்கல் வாங்கலினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எம்.ஏ.கபூர், எம்.ஜூனைதா, சமுர்த்தி உதவி முகாமையாளர்களான றியாத் ஏ. மஜீத், எம்.யூ.ஹில்மி, எம்.எம்.எம்.முபாறக் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் புதுவருட கொடுக்கல் வாங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.