மண்திட்டுடன் கட்டடம் இடிந்து வீழ்ந்து அட்டன் பகுதியில் வீடு ஒன்று சேதம்.

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் வில்பிரட்புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது 02.04.2018 அன்று இரவு 11.00 மணியளவில் மண்திட்டுடன் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததுள்ளனால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கட்டடம் இடிந்து விழும் போது வீட்டில் நான்கு பேர் உறங்கி கொண்டிருந்துள்ளதுடன் தெய்வாதீனமாக எவருக்கும் சிறிய காயங்கள் கூட ஏற்படவில்லை.

மண்திட்டு சரிந்ததன் காரணமாக வீட்டின் இரண்டு அறைகளுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸாருக்கும், கிராம சேவகருக்கும் அறிவிக்கபட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்திற்கு மாலை வேளையில் மழை பெய்து வருவதனாலேயே இந்த மண்திட்டு சரிந்து வீழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -