ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கல்முனையைச் சேர்ந்த ஏ.எல்.ஏ.அசீஸ் !!!


ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றுள்ளார்.
ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவுக்குப் பதிலாகவே, ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.எல்.ஏ.அசீஸ் நேற்றுமுன்தினம் ஜெனிவாவில், உள்ள ஐ.நா பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் முல்லரிடம் தனது பணி நியமன ஆணையை வழங்கினார்.
26 ஆண்டுகள் வெளிவிவகாரச் சேவையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஏ.எல்.ஏ.அசீஸ், இதற்கு முன்னர், வியன்னாவில் 2011 தொடக்கம் 2015 வரை வியன்னாவில், ஐ.நா அமைப்புகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்களான் ஹாஜியானி ஆர். அபுசாலிஹு மர்ஹும் அல்-ஹாஜ் எம்.ஏ.அபுசாலிஹு ஆகியோர்களின் மருமகனுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -