நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பினால் ,பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இச்சுற்றுப்போட்டியினை முன்னிட்டு வீரர்கள் அணிந்துகொள்வதற்கான சீருடைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்வு நேற்று(2018.04.11) புதன்கிழமை இரவு எட்டுமணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வினை அதிபர் SMM ஜாபிர் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து,19 அணிகளது பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைத்தார்.
நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவிருக்கும் இந்த சுற்றுப்போட்டிகளினை முன்னிட்டு நாளை (2018.04.13) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு பழைய மாணவர்கள் பங்குபற்றும் நடைபவனி ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
.”கடந்த வருடமும் ஏப்ரல் மாதம் பழைய மாணவர்கள் அமைப்பினால் இதுபோன்றதொரு கிரிக்கட் சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.இம்முறை நடைபெறும் சுற்றுப்போட்டியினூடாக பாடசாலை முகப்பினை நவீன முறையில் வடிவமைக்கும் திட்டத்தினை முன்வைத்து பழைய மாணவர்களிடையே நிதிசேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.எனவே சகல பழைய மாணவர்களும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி எமது கல்வித்தாயினை அழகுபடுத்த ஆதரவு நல்கவேண்டும்” என இங்கு உரையாற்றிய அமைப்பின் செயாலாளர் ஜனாப் அரூப் அர்சாத் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டார்.