ஏ.ஆர்.எம்.றிபாய்-
ஊரில் பாரியசவாலாக இருந்து வரும் டெங்கு ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்தி சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் நகரசபையின் தவிசாளர் I.A.வாஸித் அலியினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் உரையாடல் ஒன்று 20.04.2018 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் தவிசாளர் தலைமையில் சபையின் பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சபையின் செயளாலர்,சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள்,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்,மட்டகளப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்,ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர்,பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது தவிசாளர் உரையாற்றுகையில் டெங்கு அற்ற சூழலாக எமது நகர் மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பட்டார்
இதற்கமைய சில தீர்மாணங்கள் தவிசாளர் தலைமையில் எடுக்கப்பட்டது
*.வாராந்த ஜும்மாக்களில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான சொற்பொழிவு
*ஒவ்வொரு பள்ளிவாயல் மஹல்லா ரீதியாக விழிப்புணர்வு நடவெடிக்கைகளில் ஈடுபடுதல்
* இஷா தொழுகைக்கு பின்னால் பள்ளிவாயல்களில் டெங்கு சம்மந்தமான விழிப்புணர்வு
* மதரஸா மாணவர்களை டெங்குகட்டுப்பாட்டு நடவெடிக்கைகளில் ஈடுபடுத்துதல்
*.கிராமிய மட்டக்குழுக்களை மீள் நிர்ணயம் செய்தல்
(சமூர்த்தி உத்தியோகத்தர்,கிராமஉத்தியோகத்தர்,பொது சுகாதார பரிசோதகர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்,சன சமூக உத்தியோகத்தர், வட்டார உறுப்பினர்)
*.பாடசாலை நிர்வாகத்துடன் சேர்ந்து பரிசோதனை செய்ய சில ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுடன் சிரமதாணப்பணிகளை மேற்கொள்ளல்
*குடி நீர் கிணறுகளுக்கு குடம்பிகளை அழிக்கும் மீண்களை இடுதல்
*.ஏனைய சபைகளில் திண்மக்கழிவுகளை அகற்றும் வாகணங்களை பெற்று நகர் முழுவதும் பாரிய அளவிலான சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல்
* மாதாந்தம் ஒவ்வொரு வட்டார வட்டாரமாக புகைவிசுருதல்
இவ்வாறான தீர்மாணங்கள் எமது ஊரின் நலன் கருதி கௌரவ தவிசாளர் முன்னிலையில் எடுக்கப்பட்டது .