ஏறாவூர்பற்றின் அவநிலை

Mohamed Rishan-
றாவூர் பற்றுப் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வத்த வெள்ள நீர் வழிந்தோடும் தோணாக்கள், இன்று காணாமல் போய்வருவதும்
பல அரிசி ஆலைகளினால் சுத்தமான சுகாதாரத்தையும் இழந்து துடிக்கும் மக்களின் உணர்வை கண்டு,
அவற்றை மீளப்பெற்றுக் கொடுக்கும் முயற்சி யில் 5000 பொதுமக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டு அதனை தகுந்த அதிகாரிகளின் கவணத்திற்க்கு கொண்டுசெல்ல அப்பகுதி ஊர் நலன்விரும்பிகள் இளைஞர்கள் மேற்கொண்டனர்
அதன் பிட்பாடு இன்று  அத்தி மீறி பிடிக்கப்பட்ட அரச தோணாக்களின் காணிகள் பெறுவதுக்கும் மற்றும் சூழலைமாசுபடுத்தும் அரிசி ஆலைகளையும் அகற்றும் முகமாகவும் 5000 பொதுமக்களினால் வழங்கப்பட்ட கையெழுத்திட்டு ஆதரவு வழங்கிய தையும்
மட்டகளப்பு அரசாங்க அதிபர் அவர்களிடம் ஒப்படைக்க சென்றனர்

ஏறாவூர் பற்று பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மீராகேணி,மிச்நகர்,ஐயங்கேணி, தலவாய் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணப்படும் தோணா பகுதியானது சில தனிநபர்களால் அத்துமீறா முழுமையாகவும், பகுதிஅளவிலும் அதன் ஒதுக்கு பகுதிகளை ஆக்கிரமித்தும் பிடிக்கப்பட்டு வருவதோடு குறித்த பகுதியானது மண்இட்டு நிரப்பட்டு வருகின்றது.
இவ்வாறான அத்துமீறல் செயற்பாடு பல வருடகாலமாக நடைபெற்று வருகின்ற போதும் குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலகத்தினால் அரச காணிகளை அத்து மீறிப்பிடித்தவர்களை வெளியேற்றுவதற்கான எவ்விதமான. சட்ட நடவெடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தோணா பகுதிகள் அடை மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது அப்பிரதேசங்களுக்கு பாதுகாப்பை அளிப்பதுடன் ஆரம்பம் தொட்டே இயற்கை நிலையில் காணப்படுவதாகும்
இவ்வாறான தோணாப்பகுதிகள் அத்துமீறப்பட்டதனால் கடந்த சில அடைமழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு வழிந்தோட இடம் இன்றி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்றமையினால்
இவர்களின் அன்றாட வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு சில ஒவ்வாமை நோய்களும் உருவாகியது

அடுத்து பல அரிசிஆலைகள் இயங்குவதால் அப்பகுதி சூழல் தூசுகளால் பாதிக்கப்படுவதுடன்  குழந்தைகள் ,குடிநீர் கிணறுகள்,மற்றும் சுவாசிக்கும் காற்று கூட பாதிக்கப்படுவதனை எதிர்த்து பலமுறை தகுந்த அதிகாரிகளிடம் சொல்லியும் இதுவரை மாற்றுத்தீர்வு கிடைக்கவே இல்லை.





















































































































































































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -