நிதி மோசடி பொலிஸ் பிரிவில் மஹிந்தானந்தஅலுத்கமகேவுக்கு எதிரான விசாரணை நேற்றுஇடம்பெற்றபோது அப்பிரிவிற்கு முன்ன்னால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும்குறிப்பிடுகையில்,
அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம்ஒழுங்கு விடயங்களை கையாள்கிறார்.அவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது இன்று உலக அறியும்.கெரம்போர்ட் இறக்குமதி செய்தமை தொடர்பிலும் ரக்பிவிளையாடியதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாககூறுகிறார்கள்.இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டபொய்யே.
நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மிகக் கவனமாகசெயற்பட வேண்டும்.அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகபயன்படுத்தப்படும் இவர்களை நாளையே ஆட்சி மாற்றம்இடம்பெற்றால் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள்.இதுவிடயமாக அவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.
ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினரை மூடியஅறைக்குள் விசாரணை செய்வதற்கு ஏன் தண்ணீர் பீச்சிஅடிக்கும் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஏன் பொலிஸ்கலகம் அடக்கும் படை கொண்டு வரப்பட்டுள்ளது.இவை அனைத்துமே மக்கள் பணத்தை விரயம் செய்யும்செயற்பாடு என அவர் குறிப்பிட்டார்.