அகில இலங்கை தமிழ்மொழித்தினத்தை முன்னிட்டு சம்மாந்துறைவலய தமிழ்மொழித்தினப்போட்டிகள் இன்று(08) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி இன்றும் நாளையும்(9) சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென வலயதமிழ்ப்பாட ஆசிரியர்ஆலோசகர் இசட்.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கொட்டமட்டங்களில் தெரிவான வலயத்திலுள்ள 40பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்கள் இவ்வலயமட்டப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். இப்போட்டியில் முதலிடம்பெறுவோர் மாவட்டமட்டப்போட்டிகளில் பங்குபற்றதகுதிபெறுவர்.
இம்முறை மாவட்ட மட்டப்போட்டிகளுக்கு திருக்கோவில் வலயம் பொறுப்பாகவுள்ளது.