கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கண்கண் வைத்திய நிபுணர் டாக்டர் எ.பி. கங்கிலிபொலவுக்கு பிரியாவிடை நிகழ்வு நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.
பல துறைகளில் சிறப்புடன் இயங்கி வரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ,கண் சிகிச்சை பிரிவு என்பது அம்பாரை மட்டக்களப்பு மக்களுக்கு ஓர் தனியான தன்னிகரற்ற சேவையை ஆற்றி வந்தது யாவரும் அறிந்ததே.
இதன் காரணகர்த்தாவாக திகழ்ந்த கண் வைத்திய நிபுணர் Dr.H.M.S.A.B.HANGILIPOLA அவர்கள் இங்கு 2012ல் இருந்து கடமையாற்றி வருகின்றார். 2016ல் இடமாற்றம் பெற்றும் ,இப்பிரதேச மக்களின் நலனுக்காக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுதலில் இவ் வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவையும் தனது சேவையின் கீழ் நடாத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் 2018ல் கண் வைத்திய நிபுணர் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்ல இருப்பது இப் பிரதேச மக்களுக்கு பாரிய இழப்பாகும்.
18/04/2018 அன்று இதற்கான பிரிவு உபகார நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றிய அனைவருமே கண் வைத்திய நிபுணர் அவர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டினர் .
குறிப்பாக தொடராகவும் , மனச்சலிப்பின்றியும் , நோயளர்களுடன் அன்பாகவும், ஆதரவாகவும் பேசும் சுபாவம் கொண்டவர் எனவும், ஏழை மக்களுக்கும் தனது கருணை உள்ளச் சேவையை செய்து நடைமுறையில் காட்டியவர் எனவும் பாராட்டும் பெற்றார்.
வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்கள் உள்ளிட்ட வைத்திய நிபுணர்களும், கண் சிகிச்சை பிரிவு உத்தியோகஸ்தர்களும் சேர்ந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இது ஒரு கௌரவ நிகழ்வாக இருந்தாலும் ஓர் துன்பியல் நிகழ்வு என அனைவராலும் கூறப்பட்டது.