கல்முனையில் தமிழருக்கு பிரதி மேயர் வழங்கியதாக விமர்சிக்கின்றவர்கள் யார் ? அப்பதவிக்குரிய அதிகாரங்கள் என்ன ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது- 

ழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக பிரதிமேயராக தமிழர் தேர்வு செய்யப்பட்டமைக்காக கல்முனை மாநகர அதிகாரத்தை தமிழர்களுக்கு தாரைவார்த்து விட்டதாகவும், அதிலும் நற்பிட்டிமுனைக்கு கிடைக்கவேண்டிய பதவியை பறித்து கொடுத்ததாகவும் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நடைபெற்ற கல்முனை மாநகரசபை தேர்தலில் அதிகூடிய வாக்குகளை மட்டுமல்லாது அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும், வட்டாரங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.

அதனால் ஆட்சி அமைப்பதற்கான முழு உரிமையும் மு. காங்கிரசுக்கே உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கவுரவத்துடன் விலகி சென்றிருக்க வேண்டும்.
சாய்ந்தமருது சுயற்ச்சை குழு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உதவிகளுடன் கல்முனையை மு.கா ஆட்சி அமைக்கவிடாது தடுப்பதன் மூலம், மு.காங்கிரசின் கோட்டையை தகர்த்துவிட்டோம் என்றும், மு.கா இத்துடன் அழிந்துவிட்டது என்றும் நாடுதழுவியரீதியில் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் போட்ட சதித்திட்டம் நிறைவேறவில்லை.
பல சபைகளில் மு.கா ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய த.தே. கூட்டமைப்பினர், முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையில் ஆட்சி அமைப்பதனை தடுப்பதற்கு மு.காங்கிரசை அழிக்க துடிக்கின்ற சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்ததானது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது.
கல்முனையை தமிழர்களுக்கு காட்டிக்கொடுத்ததாக கூறுகின்றவர்கள், அதே தமிழ் மக்களின் பிரதிநிதிகளைக்கொண்டு கல்முனையில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளை பலயீனப்படுத்துவதற்காக நடத்திய சதிமானங்களையும், போலி பிரச்சாரங்களையும் மக்கள் அறியாதவர்களல்ல.

அதிலும் சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளராக தமிழர் ஒருவரை நியமித்ததுவிட்டு, இன்னும் பல முஸ்லிமகளின் சபைகளில் மு.காங்கிரசினை ஆட்சியமைக்கவிடாது சிங்கள கட்சிகள் ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு வழங்கியவர்களே இன்று மு.கா கல்முனையை தமிழருக்கு வழங்கியுள்ளதாக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

கல்முனையை பொறுத்தவரையில் பிரதி மேயர் பதவியானது ஓர் அலங்கார பதவியே தவிர, அதில் எந்தவித அதிகாரமும் இல்லை. மேயர் பதவியிலிருப்பவர் நாட்டைவிட்டு செல்வதென்றால் மட்டுமே பிரதி மேயரிடம் தனது பொறுப்புக்களை வழங்கிவிட்டு செல்வார்.

கல்முனை மாநகர ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் இருக்கத்தக்கதாக, ஆணையாளரை மீறி பதில்மேயர் பதவியில் இருப்பவரால் எந்தவித அதிகாரமும் செலுத்த முடியாது.
இந்த யாதார்த்தத்தினை நன்றாக புரிந்துவைத்திருந்தும், வேண்டுமென்று மக்களை குழப்புவதன் மூலம் மு.காங்கிரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பி அதில் குளிர்காய்வதற்கு மேற்கொண்ட விடயமே இந்த பிரதிமேயர் விவகாரம் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -