அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால்...
பல தசாப்த்தங்களாக நம் சமூகத்தின் மத்தியிலே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய விடயம்
அதுதான்
சமூக ஒற்றுமையின் அவசியமும் அதன் அவசரத் தேவையும்.
இது வரலாற்றில் என்றும் இல்லாத அளவு அண்மைக்காலமாக மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டுள்ளது. என்றாலும் இன்றளவும் அது செயல் வடிவம் பெற முடியாத வெறும் பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய கசப்பான உண்மையே. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பின்வரு காரணிகளை மிக முக்கியமானவைகளாகக் குறிப்பிடலாம்.
1. அவ்வப்போது கால சூழ்நிலைகளுக்கேற்ப அரசியல்வாதிகளும் ஆண்மீகப் பிரிவுகளும் தங்கள் கொள்கைகளைப் பலப்படித்திக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தி வருகின்றமை.
2. அவ்வப்போது எங்காவது முஸ்லீம்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது மட்டும் பேசப்பட்டு அதன் பிறகு வெகு விரைவிலேயே அது மறக்கப்பட்டு விடுவது.
3. நமது சிவில் சமுகம் இது அரசியல்வாதிகள் அல்லது சமூக இயக்கங்களின் வேலை என்றெண்னி சமூகப் பொறுப்பிலிருந்து விலகி இருத்தல்.இந்நிலையில் நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசியல் மற்றும் ஆண்மீகப் பிரிவுகளுக்கப்பால் சென்று அவை அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் ஒரு சிவில் தலைமையை உருவாக்கி அனைத்துத் தரப்பினர்களும் அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே தவிர முஸலீம்களின் தேசிய ஒருமைää தலைமை மற்றும் பாதுகாப்பு என்பது அத்தனையும் அசாத்தியமானதே.
இதன் பொருள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்ச்சியின் கீழ் வரவேண்டும் என்பதோ அல்லது அரசியலைத் துறக்க வேண்டும் என்பதோää இயக்கங்களை இல்லாது செய்ய வேண்டும் என்பதோ அல்லää மாறாக அவர்கள் எப்போதும் போல் அவரவர் விரும்பிய கட்ச்சிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கு தன்னால் ஆன பணிகளை செய்வார்கள்.
அவ்வாறே இஸ்லாமிய இயக்கங்களும்; அவரவர் விரும்பிய இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறும் வகையிலான இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படைக் கொள்கைக்கு முறன்படாத எந்தவொரு பிரிவையும் சார்ந்திருந்து தேசிய முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படாதவாறு சமூகத்திற்குத் தங்களது பணிகளைச் செய்வார்கள்.
அவ்வாறின்றி ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் கட்ச்சி ல்லது இயக்கம்தான் சிறந்தது அனைவரும் அதனைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வாதித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக உலகம் அளியும் வரை நம் சமூகத்தை ஒன்றினைக்க முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடுவோம்;.
எனவே ஒவ்வொரு தனிமனிதனும்ää இயக்கங்கள்ää அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் இதனைத் தங்களது தார்மீகக் கடமை என்பதனைப் புறிந்து ஏற்று செயல்பட முன் வருதல் இன்றைய காலத்தின் கட்டாயக் கடமையாகும்.

ஆகவே எம்மால் முடியுமான எமது சக்திக்குட்பட்டக் கடமையைச் செய்து அல்லாஹ்விடம் எமது பொறுப்பிலிருந்து விடுபடும் வகையில் நம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இஸ்லாமிய இயக்கங்கள்ää தொண்டு நிறுவணங்கள்ää அறிஞர்கள்ää சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்றோர்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்றினைக்கப்படல் வேண்டும்.
எனவே எம்முடன் இணைந்து உளத்தூய்மையுடன் பணியாற்றி தங்கள் கடமையையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து எமக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இதனை சீரனித்துக் கொள்ள சக்தியற்ற சகோதரர்கள் தயவு செய்து ஆர்வமுள்ளவர்களையும் அதைரியப்படுத்தி விடாதவாறு நடந்து கொள்ளுமாறும் இத்தால் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நமது இந்த சிறு முயற்ச்சியை ஏற்று அதனை நிறைவேற்றி வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துனை செய்வானாக. - ஆமீன்
முனாப் நுபார்தீன்.
குறிப்பு: முடியாது என்று முயற்சியே செய்யாதிருப்பதைவிட முயற்சி செய்து முடியாமல் போவது சிறந்ததே