யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை அதிகம்


பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டினை விடவும் 2017ம் ஆண்டில் 124 பேரினால் அதிகரித்த தன்மையே கானப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரிற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபடுபவர்களின் எண்ணிக்கை பெரும் பிரச்சணையாகவே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையினை விடவும் 2017ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகரித்த தண்மையில் கானப்படுகின்றது.

இந்த அடிப்படையில் 2016ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 578பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2017ம் ஆண்டில் 702பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமே இந்த எண்ணிக்கை 124 பேரினால் அதிகரித்துக் கானப்படுகின்றது. இதேநேரம் 2017ம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 702 பேரில் 123பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிப் புள்ளிவிபரமும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில்
2013ல் 714பேரும் , 2014ல் 640பேரும் 2015ல் 588பேரும் தற்கொலைக்கு முயன்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -