ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

ஏ.எம்.றிசாத்.
த்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருக்கும் ஈரானிய சபாநாயகர் எச்.ஈ.அலி லரிஜனி அவர்களை மஜ்லிஸூஸ் ஸூரா வின் தலைவர் மௌலவி அஸ்ரப் முபாரக் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (20.04.2018) காலை சந்தித்து பேசினர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தூதுக்குழுவினரிடம் ஈரானிய சபாநாயகர் கேட்டறிந்து கொண்டார்.

அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து,சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் ஈரானிய சபாநாயகரிடம் விபரித்ததோடு, இலங்கை அரசாங்கத்திற்கு அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் இது தொடர்பிலான அழுத்தங்களை கொடுத்து எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு ஈரானிய அரசாங்கம் முன்நின்று முஸ்லிம் நாடுகளை வழிநடாத்த வேண்டுமென கோரிக்கைவிடுத்தனர்.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாகி இன்றும் மீள்குடியேறாமலிருக்கும் வடக்கு முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு ஈரானிய அரசாங்கம் காத்திரமான உதவிகளை நல்கவேண்டுமெனவும், கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரானிய அரசாங்கம் இன மத பேதமின்றி உதவியளித்தது போன்று இனிவரும் காலங்களிலும் உதவவேண்டுமென தெரிவித்தனர்.

மஜ்லிஸூஸ் ஸூராவின் கருத்துக்களை செவிமடுத்த ஈரானிய சபாநாயகர் ஈரானிய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு தமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குமென உறுதியளித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -