பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு!!!


ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்உயர்பீடம் முடிவு செய்துள்ளது.
இன்று இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம் இது தொடர்பில்ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.
பிரேரணையைக் கொண்டுவந்தவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதி செய்து அதனைகவிழ்ப்பதற்கே என தமது கட்சி உணர்ந்ததாலேயே இந்த முடிவை  மேற்கொண்டதாகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக  பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, அம்பாறை, திகனகலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கானஉத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரே தமது கட்சியின் அரசியல் உயர் பீடம் கூடி இந்த இறுதிமுடிவை மேற்கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -