தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் சீனக்குடா பிரதேசத்தில் அமையப் பெற்றிருக்கும் பளிங்கு கடற்கரைக்கு இக் காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை காணக் கூடியதாகவுள்ளது.தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு சனி ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகளவான உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதனை அவதானிக்க முடிகிறது நாளாந்தம் நூற்றுக்கும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இப் பளிங்கு கடற்கரைக்கு வருகை தந்து நீராடிச் செல்கின்றனர் குறித்த பகுதிக்குள் மாத்திரமே நீராட முடியம் என்பதை தங்களது எல்லைக் கோட்டினால் இதனை பராமரித்து வரும் இலங்கை விமானப் படையினர் அடையாளமிட்டுள்ளனர்.
இதற்கான நுழைவுக் கட்டணம் தனியார் ஒருவருக்கு 20 ரூபா அறவிடப்படுகிறது வாகனங்களுக்கு வேறாக சாதாரமாக 50 ரூபாவில் இருந்து வாகன தரங்களை பொறுத்து கட்டணமாக அறவிடப்படுகிறது இதனால் இப் பளிங்கு கடற்கரை சுற்றுலாப் பகுதிகளை அதிகம் அதிகம் கவரும் பிரதேசமாக மாற்றமடைந்துள்ளது இதனால் நாட்டின் அந்நியச் செலாவாணிக்கு ஒரு பங்களிப்பினையும் ஏற்படுத்துகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -