முடிவுக்கு வந்தது பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு!!!

டந்த 48 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
குறித்த போராட்டத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம். எம் நௌபர் தலைமையில் அங்கு பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்திருந்தனர்.

2018-04-16 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக முற்றலில் இடம்பெற்ற ஒன்றுகூடலின்போது பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ள செய்தியை தலைவர் எம். எம் நௌபர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதன் அடிப்படையில் சகல கல்விசாரா ஊழியர்களும் 2018-04-17 முதல் தங்களது கடமைகளில் ஈடுபடுவது எனவும் பணிக்கு சென்றவுடன் சிறிது நேரம் சிரமதான பணியில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்க தலைவர் நௌபர்,
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சம்மேளத்தினால் 2016 ஜூலை 27 ஆம் திகதி தேசிய பல்கலைக்கழகத்தினுள் செயற்படுத்தப்பட்ட தொழில் போராட்டம் உயர் கல்வி மற்றும பெரும் தெருக்கள் அமைச்சருடையதும் மற்றும் இராஜாங்க அமைச்சருடைய பங்குபற்றுதலுடன் ஊடக கலந்துரையாடல் நடாத்தி உயர் கல்வி மற்றும் பெரும் தெருக்கள் அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு வழங்கிய இணக்கப்பாட்டுக் கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அந்த இணக்கப்பாட்டிற்கு அமைய மாதாந்த இழப்பீட்டுப் படி (MCA) கொடுப்பனவை வருடாந்த அதிகரிப்பு 2020 வருடமாகும் போது 100% வரை அதிகரிப்பதற்கு இணங்கிக் கொண்டு இருந்தும் அதற்குரியதை 2018 ஜனவரியில் அதிகரிப்பதற்குரியதாக சுற்றுநிருபம் வெளியிடப்படாமையும் ஏனைய அநேகமான இணக்கப்பாடுகளையும் நிறைவேற்றாமையின் காரணமாகவே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உரிய நேரத்தில் வழங்காததன் காரணமுமாகவே போராட்டம் நீடித்ததாக தெரிவித்தார்.

இந்த கால இடைவெளியில் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டதையிட்டு கவலையடைவதாகவும் இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் (MCA) கொடுப்பனவில் மேலும் 10% த்தை அதிகரிப்பதற்கு அரசு இணங்கியுள்ள அதேவேளை

இணக்கப்பாட்டு கடிதத்தில் இடை நிறுத்கப்பட்டிருந்த மொழிக் கொடுப்பனவு, சொத்துக்கள் கடன் எல்லையை விலக்குதல்,வைத்திய காப்புறுதி முறைமை, முறையான ஓய்வூதிய முறையினை ஸ்தாபித்தல், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருப இலக்கம் 15/2017 யை இரத்துச் செய்து பதவி உயர்வுக்காக இருக்கின்ற எல்லையினை விலக்குதல், 17/2016 சம்பள சுற்றுநிருபம் மூலம் சம்பளத்தினை அதிகரிக்கும் போது பல்கலைக்கழக சேவைக்கு நிகழ்ந்துள்ள இறக்கங்களை விலக்குதல் மற்றும் ஆட்சேர்ப்புச் சட்டங்களை மீளாய்வு செய்தல்.

அது போன்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் நினைத்தபடி நடவடிக்ககைகளை மேற்கொண்டு பல்வேறு சுற்றுநிருபங்கள் மூலம் இது வரையும் அனுபவித்த சேவை உரிமைகளை மற்றும் வரபிரசாதங்களையும் வெட்டுதல் மற்றும் 08 வருடங்களுக்கு அதிக காலம் ஆரம்பித்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உயர் உத்தியோகத்தர்கள் அதாவது மேலதிக செயலாளர்கள் 3 பதவிகள் (மனித வளப் பிரிவு, உட்பிரவேசப் பிரிவு,கல்வி நடவடிக்கை பிரிவு) நிதி நிர்வாகம்/ பிரதான கணக்காளர், பிரதான உள்ளக கணக்காளர், மற்றும் பிரதி செயலாளர்கள் பதவி வெற்றிடங்கள் நிரப்பாமை மற்றும் ஏனைய நடவடிக்கை இல்லாமை. போன்ற விடயங்களை மூன்று மாதத்துக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு இணங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -