மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு ..


ல்லாட்சி அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் அவர்களின் சொந்த பிரச்சினைகளை தீர்ப்பதில்காலம் கடத்துவதாக ஹம்பாந்தோட்டை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டஅவர் மேலும் கூறுகையில் ,
இன்று எமது தாய் நாடு இலக்கின்றி பயணித்துவருகிறது.ஆனால் ஆட்சியாளர்களோ நாட்டின் நலன்களைபற்றி சிந்தித்தி செயலாற்றாமல் அவர்களின் கட்சிகளுக்குள்உள்ள பிரச்சினைகளைப் பற்றியே சிந்துத்தும் பேசியும்வருகிறார்கள்.
தற்போது அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனஅவர்கள் உலகில் எங்கு சென்றாலும் சுதந்திர கட்சிக்குள்ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றியே பேசுகிறார்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டை மறுசீரமைப்பதை விட்டுகட்சியை சீரமைப்பதாக காலத்தை கடத்தி வருகிறது.
கட்சியை மறுசீரமைப்பதாக கூறிய ஐக்கிய தேசிய கட்சிமூத்த உறுப்பினர்கள் தற்போது சிரிகொத்த வாசலில்தலையில் கையை வைத்துக்கொண்டு உள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவுவீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்குசீர்கெட்டுள்ளது.பாதாள உலகம் கோஷ்டிகள் தலைதூக்கியுள்ளன.அரசாங்கத்தின் சில பாராளுமன்றஉறுப்பினர்கள் நீதி மன்றத்தை எல்லை மீறிவிமர்சிக்கின்றனர்.

நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக் முகம்கொடுத்துள்ளனர்.இதனை ஆட்சியாளரகள் புரிந்துகொள்ளவேண்டும்.இப்படியே காலத்தை கடத்தாமல் எஞ்சியிருக்குஒன்றரை வருட காலத்திலாவது மக்களுக்கு நன்மைஏற்படக்கூடிய ஏதாவது செய்யுங்கள் என்ற கோரிக்கையைநாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கின் என அவர்குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -