நிந்தவூர் பிரதேசத்தில் திட்டமிடப்படாத நீர் முகாமைத்துவம்


உமர் அலி-
ற்போது செய்கை பண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபோக நெற்செய்கையின்போது நிந்தவூர் பிரதேச நெற்செய்கையாளர்கள் வெகுவாகப்பாதிக்கப்பட்டுளார்கள்.மொத்தமாக ஏழாயிரம் ஏக்கர்கள் நெற்காணி உள்ள நிந்தவூர் கமநல சேவை பிரிவில் மொத்தமாக 1200 ஏக்கர்கள் மட்டுமே நெற்செய்கை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

இணைக்கப்பட்டுள்ள வீடியோ எவ்வளவு நீர் அநியாயமாக கடலை சென்றடைகின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது.இவ்வாறு விரயம் செய்யப்படுகின்ற நீரை நன்கு திட்டமிட்டிருந்தால் விவசாயிகளுக்கு வழங்கி நெற்செய்கையினை மேற்கொண்டிருக்க முடியும்.

உள்ளாறு அணைக்கட்டு பரவி,அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டு ,ஆலையடி ஓடை அணைக்கட்டு திறக்கப்பட்டு,கோழியன் கட்டு அணையும் திறக்கப்பட்டு எந்தவிவசாயிக்கும் பலனின்றி நீரானது பெரிய பாலத்தினூடாகச் சென்று நொச்சியடி எனும் இடத்தில் கடலில் கலக்கின்றது.

நாடு எதிர்நோக்கியிருக்கின்ற தீவிர வரட்சி நிலையில் இவ்வாறு நீர் விரையமாக்கப்படுவதற்கு காரணம்,திட்டமிடப்படாத நீர் முகாமைத்துவமே அன்றி வேறெந்த காரணமும் அல்ல.
ஆதாரத்திற்கு வீடியோ பார்க்க.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -