(வீடியோ).,ஓட்டமாவடியில் அலியிடம் தோற்றுப்போன ஹக்கீமும், தவிசாளர் கனவை நனவாக்கிய ஐ.ரி.அஸ்மியும்


ஓட்டமாவடி அஹம்ட் இர்ஷாட்- 
டந்த ஒரு மாத காலமாக மட்டக்களப்பு – கல்குடா, ஓட்டமாவடியில் முக்கிய பேசும் பொருளாக காணப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் யார் என்பதற்கான விடயத்தில் இன்று 06.04.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற முதலாவது அமர்வில் பகிரங்க வாக்கெடுப்பின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அப்துர் ரவூப் ஹக்கீம் கல்குடாவின் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் சானக்கியத்தில் தோற்றுப் போய்விட்ட விடயமாக இருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

வரலாற்றில் இது வரைக்கும் ஓட்டமாவடி பிரதேச சபையினை தேர்தலின் மூலம் கைப்பற்றிக்கொள இயலாத விடயமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இம் முறை இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவினை விடவும் 200க்கும் அதிகமான மேலதீக வாக்குகளாலும், ஒரு ஆசனத்தினாலும் வெற்றி பெற்றிருந்தும் பிரயோசனம் அற்ற அரசியல் காய் நகர்த்தல்கள், அவர்களுக்கிடையில் காணப்பட்ட உட்பூசல்கள், கருத்து முரண்பாடுகள் காரணமாக மீண்டும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான அதிகாரம் பிரதி அமைச்சர் அமீர் அலியின் கைக்கே கிடைத்துள்ளது.

அந்த வகையில் இன்று இடம் பெற்ற பிரதேச சபைக்கான தவிசாளர் உப மற்றும் தவிசாளர்களுக்கான வாக்கெடுப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி சார்பாக ஐ.ரி.அஸ்மியும், முஸ்லிம் காஙிரஸ் சார்பாக விஜிதா அன்வர் என்றழைக்கப்படும் எம்.ரி.எம்.அன்வரும் போட்டியிட்டனர். அதன் பிரகாரம் 18 ஆசனங்களை கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையில் அன்வருக்கு முஸ்லிம் காங்கிரசினுடைய 8 வாக்குகளும் கிடைக்க ஐ.ரி.அஸ்மிக்கு 2 மேலதீக வாக்குகளுடன் மொத்தமாக 10 வாக்குகள் அளிக்கப்பட்டதன் காரணமாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இது பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய வலது கையாக செயற்ப்பட்ட ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தின் சொந்தக்காரனாகிய அஸ்மிக்கு கிடைத்துள்ள வெற்றியாக சமூகத்தால் பார்க்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பல அரசியல் கருத்து முரண்பாடுகள், காடிக்கொடுப்புக்கள், வெட்டுக்கள், பிரச்சனைகள் என்பவற்றுக்கு மத்தியில்ல் இது வரைக்கும் பல சகிப்பு தன்மைகளுக்கு மத்தியில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் பயணத்துடன் தோல் கொடுத்தமைக்கு அப்பால் அவருடைய தீவிர அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்து வருகின்ற ஐ.ரி.அஸ்மியின் ஓட்டமாவடி பிரதேச சபையின் பதவிசாளர் கனவினை இறைவன் நனவாக்கிய விடயம் என்பதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்பதே மாற்றுக்கருத்தில்லாத உண்மையாகும்.

இது வெல்லாம் ஒரு புறமிருக்க வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரசினுடைய எட்டு உறுப்பினர்கள் அவர்களுடைய வேட்பாளர் அன்வருக்கு வாக்களித்ததுடன் ஐ.ரி.அஸ்மியின் குழுவில் யானை சின்னத்தில் வெற்றி ஏழு உறுப்பினர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும், முக்கியமாக அடுத்த உறுப்பினரான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினுடைய அஹமட்டும் சேர்ந்து அஸ்மிக்கு வாக்களித்ததினால் தவிசாளராக வர கூடிய வாய்ப்பு அஸ்மிக்கு உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அஸ்மிக்கு அளிக்கப்பட்ட பத்து வாக்குகளும் உப தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட அஹமட்டுக்கு அளிக்கப்பட்டமையினால் அஹமட் உப தவிசாள்லராக தெரிவு செய்யப்பட்டார்.

இது இவ்வாறு இருக்க முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமாவடி பிரதேச சபையில் வெற்றியடைந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற காரணத்தினாலும், அவர்களுக்கிடையில் இருந்து வந்த முக்கிய கருத்து முரண்பாடான யார் தவிசாளர் என்ற போட்டி காரணமாக ஏற்பட்ட பிரச்சனையின் அடிப்படையில் குழுக்கள் முறையில் தவிசாளராக போட்டியிட்ட விஜிதா அன்வருக்கு வாக்கெடுப்பின் முடிவில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பிரச்சனை ஏற்படும் வகையில் அச்சுறுத்தல்களை கொடுத்த்னர்.

இதனை தவிர்து விஜிதா அன்வரை காப்பாற்றும் வகையில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பிரதி அமைச்சர் அமீர் அலி பொலிசாரின் உதவியுடன் தனது வாகனத்தில் அன்வரையும், தவிசாளராக அஸ்மியினை தெரிவு செய்வதற்கு உதவிய சுதந்திர கட்சியினுடைய உறுப்பினர் அஹமட்டையும் பாதுகாப்பாக ஏற்றிச்சென்றமை பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய தூய பன்பினையும், சிறந்த அரசியல் கலாச்சாரத்தினை கல்குடா மக்களுக்கு தெளிவு படுத்தும் விடயமாக பார்க்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் இடம் பெற்ற சக விதமாக நிகழ்வுகளின் சுருக்கமான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வின் காணொளி -

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -