சாய்ந்தமருது காரைதீவு எல்லையில் குப்பைகள் கழிவுகள்: கல்முனை மாநகரசபை சுகாதாரத்திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா?

காரைதீவு நிருபர் சகா-
சாய்ந்தமருது17ஆம்பிரிவு மற்றும் காரைதீவு மாளிகைக்காடு எல்லைபிரதானவீதியில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டுவருகிறது.

குடிமனைகள் செறிவாகஉள்ள அப்பகுதியில் ஓடும் நீரோடையிலும் இந்தக்கழிவுகள் தினம்தினம் கொட்டப்பட்டுவருகின்றது. இப்பிரதேசம் கல்முனை மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்டது.
மக்கள் குடிமனைகள் உள்ள பகுதியில்இவ்விதம் குப்பைகள் கழிவுகள் நிரம்பிவருவதால் துர்நாற்றம் வீசுகின்றது. மழைநேரத்தில் மிகவும்கூடுதலாக துர்நாற்றம்வீசுகிறது. மிகமோசமாக உள்ளது. பிரதானவீதியாகிய அவ்வீதியை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால் கட்டாயம் செல்லவேண்டியவர்கள் அவ்வீதியினூடாகப்பயணிக்ம்போது மூக்கைப்பொத்திக்கொண்டு பலத்த அசௌகரியத்தின்மத்தியில் போகவேண்டியுள்ளது.
அதேவேளை அருகிலுள்ள குடிமனைகளில் வாழும் மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவிவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அருகிலே அரச பாடசாலையொன்றுள்ளது. சிறு சந்தையொன்றும் மாட்டிறைச்சி விற்கும் கடையும் ஒரு உணவகமும் உள்ளது.
அதனருகே ஒரு பள்ளிவாசலும் பாலர்பாடசாலை நூலகம் போனற் இடங்களுமுள்ளன.
சாய்நதமருது 17ஆம் பிரிவிலுள்ள அந்த இடத்தில் ஒரு நீரோடை செல்கிறது அதற்குள்ளும் கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. அருகில் மாளிகைக்காடு அல்ஹூசைன் முஸ்லிம் வித்தியாலயம் உள்ளது. நுற்றுக்கணக்கான மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களுக்கு ஆபத்துள்ளது.
எனவே கல்முனை மாநகரசபை சுகாதாரத்திணைக்களத்தினர் விரைந்து செயற்படவேண்டும். மக்களையும் சூழலையும் காப்பாற்றவேண்டும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -