நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு!!!

க.கிஷாந்தன்-
லங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்த்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், நுவரெலியா நகரம், பூங்காக்கள், வெறிச்சோடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -