மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-


மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இஸ்ஸதீனும், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். இந்த பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன்; 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முதலாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -