நாம் எங்கு இருக்கின்றோம் என்பதை விட எதிர் காலத்தில் எங்கு இருக்கவேண்டும் என்று திட்டமிடவேண்டும் என்று வலயக்கல்வி பணிப்பாளர் தி. ரவி தெரிவித்தார்.
கடந்த 5.4.2018 மட்/ககு/வீரநகர் அ.த.க. பாடசாலையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எஸ். ராஜகுமார் தமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலயக் கல்விப்பணிப்பணிப்ளர் தி. ரவியும் விசேட அதிதிகளாக வி.. சசிதரன் அதிபர் மட் /ககு /வடமுனை வித்தியாலயம் அவர்களும் எஸ். சிவனேசராஜா அதிபர் மட் /ககு / அக்குரனை பாரதி வித்தியாலயம் ஆகியோரும் வருகைதந்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் எமது வலயத்தில் 83 பாடசாலைகள் இருக்கின்றது அதில் கஷ்ட பிரதேச பாடசாலை அதி கஷ்ட பிரதேசபாடசாலைகளும் இருக்கின்றன அதிலும் இந்த பாடசாலை அதி கஷ்ட பிரதேச பாடசாலையாகும் இது போக்குவரத்தும் மிக கஸ்டமான பாடசாலையாகும் இங்கு உள்ள பிள்ளைகளின் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது இவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இங்குள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான சாகல ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கின்றோம் அதில் நாம் முதற்கட்டமாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெருகின்றது. மேலும் தற்போது இங்குள்ள ஆசிரியர்கள் இம்மாணவர்களின் வளர்ச்சிற்கு திறமையாக உழைக்கின்றனர். மாணவர்களாகிய நீங்கள் தாய் தந்தையர்களுக்கு வழங்கும் உச்ச மரியாதயை இவ் ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்.
நீங்கள் நகரபுற மாணவர்களை விட பத்து மடங்கு முயற்சிசெய்ய வேண்டும் பெற்றோர் உங்கள் முதலீடுகளாக பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏன் என்றால் இந்த மாணவர்களின் எழுத்தறிவு வீதம் அதிகரித்துள்ளது மேலும் பெற்றோராகிய உங்களை தணிப்பட்ட முறையில் சந்தித்து மாணவர்களின் கல்வியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான சகல நடவடிக்கயும் எடுக்க இருக்கின்றோம். இப்பிரதேசத்தில் இருந்து பல்கலை கழகம் செல்கின்ற பிள்ளைகளுக்கு விசேட புலமை பரிசில் திட்டம் அமுல் படுத்த இருக்கின்றோம்.
இந்த பிரதேசத்தில் நீண்டகாலம் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு கல்குடா கல்வி வலயம் சிரம் தாழ்த்துகிறது. பிள்ளைகளே நீங்கல் எங்கு இருக்கின்றீர் என்பது முக்கியம் அல்ல எதிர்காலத்தில் எங்கு இருக்கு வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் மாணவர்கள் அனைவரும் வளமான பிள்ளைகள் அவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.