கடந்த வெள்ளிக்கிழமை (20) கொழும்பில் உள்ள இந்திய உயா்ஸ்தாணிகா் ஆலயம் முன்றலில் எமது பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான ஜக்கிய சமாதான கூட்டமைபின் பெயரைப் பயன்படுத்தி இந்தியாவில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கான ஆர்ப்பாட்டம் மொன்று நடைபெற்றுள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் . இவ் அமைப்பின் தலைவராகவும் மொஹமட் மிப்லால் என்பவா் கையொப்பமிட்டும் மனு மற்றும் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சகல பாதைகளிலும் இக் கட்சியின்பெயா் பொறிக்கப்பட்டிருந்தது.
எமது கட்சியின் அரசியலமைப்புக்குழு இக் கட்சியின் பெயரைப் பயண்படுத்தி எவருக்கும் இவ்வாறானதொரு ஒர் ஆர்ப்பாட்டத்தினை நடாத்துவதற்கும் அனுமதியளிக்கவில்லை. என ஜக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சா் எம்.ரீ. ஹசன் அலி ஊடகங்களுக்கு தெரவித்துள்ளாா். ஆசிபாவுக்கு நீதி வேண்டும். பாலியல் மற்றும் கொலைசெய்தவா்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்த்பட்டிருக்கும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.
அத்துடன் எமது கட்சியின் பெயரைப்பயண்படுத்தி இப் ஆர்ப்பாட்டத்தில் சில அருவருக்கதக்கதான சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கட்சியின் தலைவராக தான் செயற்படுவதாகவும் ஆனால் மொஹமட் மிப்லால் தான் தலைவராக ஊடகங்களுக்கும் அவர் கையளித்த அறிக்கைகளிலும் ஒப்பமிட்டுள்ளாா். அத்துடன் இந்தியப் பிரதமரின் உருவப்படத்தினை காலால் மிதிப்பது மற்றும் இந்தியக் தேசியக் கொடியை நிலத்தில் போட்டு மிதிப்பது, உயா் ஸ்தாணிகா் முன்றலில் கொடிகள், பிரதமரின் உருவப் படங்கள் பாதைகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் ஊடகங்கள் வாயிலாக காண்பிக்க்பபட்டது. இவ்வாறான அருவருதக்க சம்பவங்களுக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளாா். இதனை இக் கட்சியின் தலைவா் என்றமுறையில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இச் சம்பவங்களுக்கு எமது கட்சிக்கும எவ்வித சம்பந்தமுமில்லை நாங்கள் இச்சம்பவத்திற்கு பொறுப்பல்ல எனவும் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்துள்ளாா்.