இக்கலந்துரையாடல் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் திண்மக்கழிவுகளை முறையாக சேகரித்தல், அகற்றுதல் மற்றும் தரம்பிரித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் போது ஏறாவூர் நகர சபையின் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
திண்மக்கழிவுகளை உக்கும் கழிவு,உக்காத கழிவுகளாக தரம்பிரித்து இதனை திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டதை யாவரும் அறிந்த விடயம் அதில் எமது ஊழியர்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதற்காண காரணம் மக்களிடத்தில் இன்னும் தெளிவான பூரணத்துவம் இல்லாததே இதனை கருத்தில் கொண்டு தவிசாளர் எதிர்காலத்தில் எமது ஊரை பசுமையாக்கும் திட்டத்தில் சில நடவெடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

* ஒவ்வொரு வட்டார வட்டாரமாக
உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் அனைவரும் சென்று விழிப்புணர்வூட்டல்
* பொது இடங்களில் காணப்படும் கழிவுகளை அகற்றும் முகமாக சிறமதாணப்பனியை ஏற்படுத்துதல்
* அடைமழை காலங்களில் மழைநீர் வடிந்தோடும் முகமாக வடிகாண்களை சீரமைத்தல்
*குறிப்பாக பெண்களை திண்மக்கழிவு முகாமைத்தவத்துக்கு அழைத்துச்சென்று கழிவுகள் சம்மந்தமான தெளிவை ஏற்படுத்துதல்
* பிரதான வீதிகளில் காணப்படும் வெற்றுக்காணிகளை அடையாளப்படுத்தி உரியவர்களிடம் கழிவுகளை அகற்ற உத்தரவிடல்
*.திண்மக்கழிவு சம்மந்தமான தெளிவூட்டல் துண்டுப்பிரசுரம் மூலம் வெளியாக்குதல்
இவ்வாறான நடவடிக்கைகள் எமது ஊரின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட வேண்டும் என்று நகரசபை செயலாளரிடம் கௌரவ தவிசாளர் அவர்கள் முன்வைத்தார்
மேலும் தவிசாளர் கூறுகையில் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும் வரை எமது சூழலில் மாற்றம் ஏற்படாது என்றும் எமது ஊரை பசுமையாக்கும் திட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள்,சுகாதார அதிகாரிகள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சமூக நலன்விரும்பிகள் போன்றோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.