மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்..


மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் அரசாங்கம் மீள் பரிசீலனைசெய்யவேண்டும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று, நாம் ஏதாவது சொன்னால், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக கூறுகிறோம்என்ற ரீதியில் பலர் நோக்குவதை அவதானிக்க முடிகிறது. இன்று இலங்கையில் ஏதாவதுபிழை இடம்பெறுமாக இருந்தால், அதனை முதலில் தட்டி கேட்பவர்களாக, நாங்கள் தான்உள்ளோம்.
இப்போது மாத்திரமல்ல, எப்போதும் இப்படியே செயற்படும் உறுதியிலும் உள்ளோம்.இதன் போது இன, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும்.
எமது ஆட்சிக்காலப்பகுதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு 0.50 வீத வரியேஅறவிடப்பட்டிருந்தது. தற்போது 14 வீதமாக மாற்றப்பட்டுள்ளது.இது சிறியஅதிகரிப்பல்ல.இது மாணிக்க கல் வர்த்தகத்தை மேற்கொள்வோரை மிகக் கடுமையாகபாதிக்கும். இவ் வர்த்தகத்தை இலங்கை முஸ்லிம்களே அதிகம் மேற்கொள்கின்றனர். இதுமுஸ்லிம்களின் பொருளாதரத்தில் பெரும் எதிர் தாக்கம் செலுத்தும்.
இவ் ஆட்சி அமையப்பெறுவதற்கு முன்பு, ஆட்சியை கைப்பற்றுவதற்கான தேர்தல்பிரச்சார கூட்டங்களில், பேருவளை போன்ற பகுதிகளில் அமைச்சர் ராஜிதவால்,மாணிக்ககல் வர்த்தகத்தை மேம்படுத்த பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுமிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
இப்போது நடைபெறுகின்றவற்றை பார்க்கின்ற போது, அவர்கள் சொன்னதுக்குமாற்றமாகவே, அனைத்தையும்செய்து வருகிறார்கள். இவ் ஆட்சியை நல்லாட்சியாகமாற்றப்போவதாக கூறினார்கள். தற்போது நடைபெறுவது என்ன நல்லாட்சியா?,அனைத்தும் அப்படித்தான்.

இவ் வர்த்தகத்தில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மிக ஈடுபாடு கொண்டவர்கள்.எமது ஆட்சிக் காலப்பகுதியில் மாணிக்க கல் வர்த்தகத்தை மேற் கொள்வதற்கு எந்தசிரமமுமிருக்கவில்லை.இதனை பார்த்த ஐக்கிய தேசிய கட்சியுடன் பிணைக்கப்பட்டிருந்தஅப் பகுதி மக்கள், அவர்களை கை கழுவி, எம்முடன் கை கோர்த்திருந்தனர். இவர்களைஎம்மிடமிருந்து பிரிப்பதை நோக்காக கொண்டும் தான், அளுத்கமை கலவரம்ஈடுபட்டிருந்தது என்ற உண்மையையும் இவ்விடத்தில் கூறுவது பொருத்தமாக அமையும்என நினைக்கின்றேன் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -