கடந்த வருடம் குறித்த பாடசாலையானது நூற்றாண்டு விழாவிற்கு தாயாரகி கொண்டிருந்த வேலையில் அரசியலுக்கு அப்பால் முதலாம் நபராக கல்குடாவில் உயர் பதவியில் இருக்கும் தற்போதைய பாகிஸ்தானுக்கான பிரதி தூதுவர் என்.எம்.அனஸ் பாடாலையின் அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் மற்றும் நிருவாகத்துடன் கலந்தாலோசித்து 2017ம் ஆண்டு சாதராண தர பரீட்ச்சையில் பாடசாலை சாதனை படைக்க வேண்டும் என்ற ரீதியில் மிக முக்கியமான அனுசரணை, வழிகாட்டல்கள், ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
அதன் அடிப்படையில் மொத்தமாக குறித்த பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களில் அதீத திறமையுடையவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான மேலதீக பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனைகளை இலங்கையில் இருக்கின்ற ஏனைய பாசாலைகளை ஒப்பிட்டு வழங்கியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட பாடசாலை அதிபரும் நிருவாகத்தினரும் முழுமையாக நன்மை அடையும் விதத்தில் ஆலோசனையினை நடை முறைப்படுத்தி இருந்தனர். குறித்த மேலதீக பிரத்தியேக வகுப்புக்களுக்கான முழு செலவினையும் பிரதி தூதுவர் அனஸ் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிட தக்க முக்கிய விடயமாகும்.
இவ்வாறு சாதாரண தரத்தில் இவ்வருடம் எட்டு பேர் 9 A சித்திகளைப் பெற்று ஓட்டமாவடி மண்ணுக்கு பெறுமை தேடி தருவதற்கு காரணமாய் இருந்த அனஸ் குறித்த தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உயர் தரத்திற்கான கணித, விஞ்ஞான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்து செயற்பட்டதோடு பல வருடங்களாக உயர் தர விஞ்ஞான மாணவர்களுக்கான உயிரியல் பாட ஆசிரியராகவும் கடமையாற்றி இன்று கல்குடா பிரதேசத்தில் பல வைத்தியர்களும், பொறியலாளர்களும் உருவாவதற்கு அத்திவாரம் இட்டவர் என்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் ஓட்டமாவடி தேசிய பாடசாலையனாது நூற்றாண்டு விழாவினை கொண்டாடுவதற்காக ஆயத்தமான பொழுது பாடசாலை பழைய மாணவர்களுக்கான கொழும்பு கிளையினை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கி ஒட்டு மொத்த பழைய மாணவர் சங்கமும் திறம்பட இயங்குவதற்கு முன்னுதாரணமாக கொழும்பு கிளையினை மாற்றியமைத்தார். அத்தோடு நின்று விடாமல் இறுதி வரைக்கும் நூற்றாண்டு விழாவினை தேசியம், மாவட்டம் என்ற ரீதியில் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றி அமைப்பதற்கு குறித்த கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினை உருவாக்கி, நிருவகித்து உரியவர்களிடம் கையளித்து விட்டு பாக்கிஸ்தானுக்கு புறப்பட்டிருந்தார்.
தனது ஆரம்ப கல்வியினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியினை கல்முனை சாகிறா தேசிய பாடசாலையிலும் தொடர்ந்த என்.எம்.அனஸ் விஞ்ஞான பிரிவில் தனது பல்கலை கழக பட்டத்தினை பெற்றவராவார். அதற்கு பிற்பாடு பல வருடங்களாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் ஆசிரியராக தனது சேவையினை பாடசாலைக்கும் தான் பிறந்த மண்ணுக்கும் வழங்கியதுடன், அதற்கு பிற்பாடு இலங்கை கடல் கடந்த நிருவாக பரீட்ச்சையில் (SLOS) சித்தியடைந்து குவைத், ஜேர்மன், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள தூதுவராலயங்களில் கடமையாற்றி தனது சேவையினை முழு இலங்கைகைக்கும் வருகின்றமை பிறந்த ஓட்டமாவடி மண்ணுக்கும் முழு கல்குடாவிற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
மேலும் சமூக சேவையினை ஓட்டமாவடி மத்திய கல்லூரியுடன் மட்டுப்படுத்தி கொள்ளாமல் சமூகத்தில் கல்வியில் பல வகையான தேவைகளை உடையவர்களுக்கு தனது உதவி கரத்தினை நீட்டும் அனஸ் குறிப்பிடும் படியாக ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் உள்ள ஹிஜ்றா வித்தியாலயத்திற்கான காணி கொள்வனவிற்காக ஐம்பதாயிரம் நன் கொடையாக வழங்கியுள்ளதோடு, அவருடைய பாடசாலை நண்பர்களால் மேற்கொள்ளப்படும் இலவச வைத்திய முகாம்களுக்கான செலவில் பெரும் பங்கினை தான் பொறுப்பெடுத்து வழங்கி வருவதும் முக்கியமான ஒரு சேவையாக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு பாகிஸ்தானுக்கான பிரதி தூதுவர் என்.எம்.அனசினை நினைத்து பெருமை படும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையும் அதன் அதிபர் மற்றும் நிருவாகத்தினர் எதிர் வரும் காலங்களிலும் குறித்த பாடசலையானது இன்னும் பல சாதனைகளை கல்வியில் அடைந்து கொள்வதற்கு அனசினுடைய ஆலோசனைகளையும் ஏனைய உதவிகளையும் பெற்று நடை முறைபடுத்த வேண்டும் என்பது அனசினுடைய விருப்பமாகவும் ஒட்டு மொத்த கல்குடா வாழ் சமூகத்தினது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
அத்தோடு அரசியலுக்கு அப்பால் முழு கல்குடாவும் பெருமைபடும் விதத்தில் முக்கிய உயர் பதவில் இருக்கும் அனஸ் கல்குடாவின் தற்போதைய அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆசீர்வாதத்துடனும், கல்குடா மக்களின் ஏகோபித்த விருப்பத்துடனும் எதிர் காலத்தில் கல்குடாவிற்கான அரசியல் தலைமையினை வழங்க தகுதியானவர் என்பதை இங்கே எனது கருத்தாக பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். அதனோடு சேர்த்து கல்குடாவிற்கு மிகவும் தேவையாக இருக்கின்ற நேர்மையான, திறமையான இஸ்லாமிய பயபக்தியுடைய எதிர்கால அரசியல் தலைமைக்கு சகல விதத்திலும் பொறுத்தமானவர் அனஸ் என்பதனை மிகத் தெளிவாக தற்போதைய அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலி உள்வாங்கி அதனை தூர நோக்கு சிந்தனையுடன் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதனை நான் பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் கல்குடா மகன் என்ற அடிப்படையில் வேண்டிக்கொள்கின்ற முக்கிய விடயமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.