ஹெலிஹொப்டர் நவாசின் கூற்றின் மூலம், அமைச்சர் றிஷாத் எப்படி குற்றவாளியாகிறார்?


ஹபீல்.எம் சுஹைர்-
ல்முனை மாநகர ஆட்சியமைப்பின் பின்னர் பல, சல சலப்புக்கள் ஏற்பட்டிருந்தன. மு.காவுக்கு எதிரான வாள் வீச்சுக்கள் மிக வீரியமாக அமைந்திருந்தன. அதனை எதிர்கொள்ள ஹெலிஹொப்டர் நவாசின் கூற்றொன்றை மு.காவினர் தூக்கி பிடித்து வருகின்றனர். அதனை பிரதி அமைச்சர் ஹரீஸ், தனது முக நூலிலே பணம் செலுத்தி ஸ்பொன்சர் பண்ணியுள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவமும் ஏதேதோ சொல்லி, தனது முக நூலில் பகிர்ந்துள்ளார்.
ஹெலிஹொப்டர் நவாசின் குறித்த பேச்சின் மூலம், அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருது சுயேட்சை குழுவை நம்பியமையே, இவை அனைத்துக்குமான பிழையாக குறிப்பிடுகிறார் என சுருக்கமாக சொல்லி விடலாம். இது தவிர்ந்து, அவரது பேச்சில் வேறு எந்த குற்றச் சாட்டுக்களுமில்லை. அமைச்சர் றிஷாத் சாய்ந்தமருது சுயேட்சை குழுவை நம்பியமையை யாராலும் ஒரு துரோகமாக குறிப்பிட முடியாது. இச் செயலின் மூலம், மேயர் மற்றும் பிரதமர் மேயர் அனைத்தும் எமக்குள் தான் இருக்கப்போகின்றது. அதில் என்ன துரோகமுள்ளது? அது அவருடைய அரசியல் காய் நகர்த்தல். அவர் மு.காவின் துணையின்றியும், முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவித பாதிப்புமின்றியும், தனித்து ஆட்சியமைக்கும் நிலை இருந்தால், மு.காவோடு சேர வேண்டிய அவசியமில்லை.
அவரது கூற்றின் பிரகாரம் அமைச்சர் றிஷாத் ஒரு போதும் துரோகியாகாவில்லை என்பதை முதலில் உள்ளத்தில் பதித்து கொள்ள வேண்டும். அமைச்சர் றிஷாத் தோடம் பழத்தை தன் பக்கம் ஈர்த்து, ஆட்சியமைத்து விடுவாரோ என்பதற்காக தமிழ் அணிகளுக்கு பிரதி மேயரை விட்டுக்கொடுத்த, சமூக நலனற்ற, மு.காவின் அரசியல் நோக்கம் கொண்ட செயலே துரோகமானதாகும்.
மு.கவினர் ஹெலிஹொப்டர் நவாசின் பேச்சை தூக்கி பிடிப்பதன் மூலம், அமைச்சர் றிஷாத் மு.காவோடு பேச்சுக்கு இணங்கி இருந்தால், தமிழருக்கு பிரதி மேயரை கொடுத்திருக்க தேவையில்லை மற்றும் நற்பட்டிமுனைக்கு பிரதி மேயரை வழங்கியிருக்கலாம் என்பதை மு.காவினரே மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றனர். குறித்த பேச்சின் மூலம், அவர்கள் நிரூபிக்க முனைவது வேறு என்னவாக இருக்க முடியும். இதன் மூலம், இதுவே அவர்களது உள்ளத்திலும் சரியானதாக தென்பட்டுள்ளத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
இவர்கள் தங்களது உள்ளத்தில் சரியாக பட்டதை செய்ய முடியாமைக்கு, அமைச்சர் றிஷாத் கல்முனை ஆட்சியை கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சமே காரணமாக அமைந்திருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது. இப்படியான ஒரு நிலையில், கல்முனை முஸ்லிம் சமூகத்துக்கு துரோகமிழைத்து, தமிழர் ஒருவரை பிரதி மேயராக்கியாவது கைப்பற்றுவோம் என சிந்திப்பது ஒரு சமூக சிந்தனை கொண்ட கட்சிக்கு அழகல்ல. நம்மால் துரோகமின்றி ஒன்றை சாதித்து கொள்ள முடியாதென்றால், துரோகமின்றி சாதித்துக்கொள்ள கூடியவருக்கு உதவ வேண்டும். அதுவே சமூக நலனை அடிப்படையாக கொண்ட சிந்தனை. இந்த சிந்தனையை அடிப்படையாக கொண்டு செயற்பட்டிருந்தால், அமைச்சர் றிஷாதின் தோடம்பழ வியூகம் பிழைக்க, மு.காவை சேர்ந்த ஒருவர் மேயராகவும், மயிலை சேர்ந்த ஒருவர் பிரதி மேயராகவும் தெரிவாகியிருப்பர்.
ஹெலிஹொப்டர் நவாசின் கூற்றின் மூலம் கூட, அமைச்சர் றிஷாத் கல்முனை முஸ்லிம் சமூகத்துக்கு துரோகியாகவில்லை என்பதையும் மு.காவே கல்முனை முஸ்லிம் சமூகத்துக்கு துரோகமிழைத்தது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -