கல்முனை சாஹிறா கல்லூரியின் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளை இல்லாமலாக்கப்பட்டதற்கும், நடப்பு ஆண்டிற்கான பழைய மாணவர் சங்கம் செயற்பட முடியாமல் போனதற்கும் முழுக்க முழுக்க பாடசாலையின் தற்போதைய அதிபரே காரணம்.
இதனை விலாவாரியாக விளக்குகின்ற போது அது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கத்தை உண்டாக்கும் என்ற அடிப்படையில் ஒரு பொறுப்புள்ளவன் என்ற காரணத்தினால் நான் அதனை விரும்பவில்லை.
அதிபரின் பக்கமிருக்கின்ற பிழைகளை ஒரு சில சுயநலவாதிகளின் வற்புறுத்தலினால் மறைத்து என்னை பிழையாக காட்டி, ஒரு பொறுப்பான அதிபர் என்பதை மறந்தவராய் அறிக்கை விட்டிருப்பது என்னையும் உண்மைகளை வெளிப்படுத்துங்கள் என்று தூண்டுகின்ற பொறுப்பற்ற செயலாகவே பார்க்க முடிகிறது.
எனவே, பாடசாலையின் அதிபர் தான் வெளியிட்ட அறிக்கையினை பொறுப்பான முறையில் மீளாய்வு செய்யாவிடின், அவரது நியமனத்திலிருந்து இதுவரை பழைய மாணவர் சங்கம் மற்றும் அதன் கொழும்புக் கிளையுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை ஒரு அறிக்கையாக வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
அது என்னை நியாயப்படுத்துவதற்காக அல்ல. மாறாக நடந்த உண்மைகளை எல்லோரும் அறியவேண்டும் என்பதற்காகவே இருக்கும்.
வைத்திய கலாநிதி என். ஆரிப்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
சாஹிறா கல்லூரி, கல்முனை
வைத்திய கலாநிதி என். ஆரிப்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
சாஹிறா கல்லூரி, கல்முனை
செய்தி
http://www.importmirror.com/2018/04/blog-post_64.html