தலவாக்கலை பி.கேதீஸ்-
மத்திய மாகாண தமிழ் கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற தெரிவுசெய்யப்பட்ட நூறு பாடசாலைகளில் நிலவுகின்ற பௌதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கணனிகள், பல்லூடக உபகரணங்கள்,டுப்ளோ இயந்திரம், புகைப்பட நகல் இயந்திரங்கள் மற்றும் வாசிகசாலைக்களுக்கான அலுமாரிகள், கதிரைகள் உபகரணங்கள் போன்றன வழங்கி வைக்கபட்டன.
இந்நிகழ்வு 18.4.2018 புதன்கிழமை மத்திய மாகாண தமிழ் கல்வி,இந்து கலாசார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது மத்திய மாகாண விவசாய,இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்,மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, விவசாய அமைச்சின் செயலாளர், மற்றும் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் சத்தியேந்திரா, கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், வலய கல்வி காரியாலய உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர், அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டிருப்பதை இங்கு காணலாம்.