A.R.M.RIFAY-
ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இயத்துல் உலமாசபையும் இணைந்து நகரசபையின் தவிசாளரை கௌரவப்படுத்தும் முகமாக விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் போது எமது ஊரின் எதிர்கால அபிவிருத்திகள் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை பேனல், கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துதல் சம்மந்தமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து நகரசபையின் கௌரவ தவிசாளர் உரையாற்றுகையில்
எமது நகரசபையினால் நாகரீகமான,ஒழுக்கமான பணிகளை கட்டியெழுப்பும் போது சம்மேளனம், மற்றும் உலமாசபையினரின் காத்திரமான பங்களிப்பு அவசியமானது என்றும்
மேலும் எங்களை கௌரவப்படுத்தும் முகமாக இவ் ஒன்று கூடலை ஏற்பாடு செய்தமைக்கு ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும்,ஐம்இயத்துல் உலமா சபைக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
தொடர்ந்து சம்மேளனத்தலைவர் உரையாற்றுகையில்
கௌரவ தவிசாளர் உடனான எமது முதல் சந்திப்பு ஏறாவூர் பயணத்தின் மைல்கல்லாக அமையும் என்றும் எமது ஊர் வரலாற்றின் துடிப்புள்ள இளைய தலைவர் என்றும்
இவ்வாறான தலைமைத்துவம் எமது ஊருக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நகரசபையின் சட்டதிட்டங்களை பேணி
எமது ஊரின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சிறந்த கட்டமைப்போடு தாங்கள் வழிநடத்த வேண்டும் என்று புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்
இவ்வாறான சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது
ஊரின் வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருப்பொருளில்
* ஆற்றங்கரை வாவியில் இருந்து மறு கரைக்கு செல்லும் முகமாக மேம்பாலம் அமைத்தல் அல்லது படகுச்சேவை அமைத்தல்
* எமது நகரை தூய நகராக மாற்றவேண்டும் என்ற நோக்கில் கழிவு முகாமைத்துவ சேவையினை துரிதப்படுத்தல்
*பொதுச்சந்தை ஊடாக வியாபார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் வண்ணம் பல அபிவிருத்திகளை செயற்படுத்துதல்
* ஊரின் வர்தகத்துறையில் பாரிய கவணம் செலுத்துதல்
போன்ற விடயங்கள் ஊரின் எதிர்கால அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்டது.