தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக் மாகாண கல்வி அமைச்சை தொடர்புகொள்ளவும் –இம்ரான் எம்.பி


தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாகாண அமைச்சை தொடர்புகொள்ளவும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். விரைவில் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக இன்று கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியவசத்தை சந்தித்த பின் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் எனக்கு கிடைக்கப்பெற்றதனால் இன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளர்,கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து இந்நியமனம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினேன்.

இந்நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை திருகோணமலை தொண்டராசிரியர் சங்கம் உரியமுறையில் மேற்கோள்ளவில்லை. மேலும் தொண்டராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது போது பிரதமரின் விசேட பிரதிநிதிகளாக அவ்விடத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப்,பேராசிரியர் ஆசு மாரசிங்க குழுவினரால் வழங்கப்பட்ட அறிக்கை முறையாக பின்பற்ற படவில்லை.இதனால் தகுதியுள்ள தொண்டராசிரியர்கள் பலருக்கு நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப்பெறவில்லை. தகுதியற்ற பலருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
2007ஆம் ஆண்டுக்கு முன்னர் மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டராசிரியராக பணியாற்றியவர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு கடமையாற்றி இதுவரை நேர்முகத்தேர்வுக்கு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் உடனடியாக சகல ஆவணகளுடன் கிழக்கு மாகாணகல்வி அமைச்சை தொடர்புகொண்டு பதிவுசெய்து கொள்ளுங்கள். இது தொடர்பான அறிவித்தல் கல்வி அமைச்சின் செயலாளரால் மாகான கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யும் தகுதியுள்ள தொண்டராசிரியர்கள் அனைவரும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் பத்தரமுள்ளவில் அமைந்துள்ள கல்வி அமைச்சிலேயே இறுதி நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளதுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -