அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சேவைசெய்யும் கல்விசாராத ஊழியா்கள் சங்கங்கள் இன்று (10) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல முற்பட்டவா்களை நிதிஅமைச்சின் முன்னால் பொலிசாா் பிரதான பாதையை மூடி தடுத்து நிறுத்தியுள்ளாா்கள். அவ்விடத்திலிருந்து தமது 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கோசம் எழுப்பிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்
கல்விசாா் ஊழியா்களுக்கு சம்பள அதிகரிப்பு, பதவிஉயா்வுகள், சொத்துக்கடன் அதிகரிப்பு, மேலதிக கொடுப்பணவு பரீட்சை மூலம் ஒரு சிறுதொகையினருக்கு மட்டும் பதவிஉயா்வு வழங்காமல் சகலருக்கும் பதவிஉயா்வு வாக்குறுதியளிக்கப்பட்ட 2 வருட கொடுப்பனவினை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் முன் வைத்து கடந்த ஒரு மாதகாலமாக ஆர்ப்பாட்டத்திலும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனா்.
இதற்காக பல்கலைகக்கழக ஆணைக்குழு, உயா்கல்விஅமைச்சு, நிதி அமைச்சு எவ்வித தீா்வையும் பெற்றுத்தரதாலேயே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழயா் சங்கத்த தலைவா் தெரிவித்தாா். இதனால் கடந்த ஒரு மாதகாலமாக பல்கழைக்கழகங்களது கல்வி பரிட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு மாணவா்கள் பல்கழைக்கழக விரிவுரையாளா்கள் பாரிய பிரச்சினைகளை எதிா்நோக்கியுள்ளனா்.