அலுவலக உடைகளில் மாற்றம் வேண்டும்!


அப்துல்சலாம் யாசீம்-
ரச திணைங்களங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் கடமை நேரத்தில் கௌரவமான உடைகளை அணிய வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள வாலிபர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச திணைக்களங்களில் கடமையாற்றி வரும் பெண் ஊழியர்கள் கடமை நாட்களில் தமக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருவதாகவும், அலுவலகங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள
செல்கின்றவர்களுக்கு அலுவலக உத்தியோகத்தர்களை

இணங்காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான திணைக்களங்களில் ஸ்கேட் பிலவுஸ்,ஜீன்ஸ் டீசேட் போன்ற அநாகரிகமான உடைகளை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு சமூகமளிப்பதாகவும் கிழக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வரும் இந்நிலையில் அரச அதிகாரிகளும், ஊழியர்களும் கலாச்சார மேம்பாட்டை மதித்து மற்றைய நாட்டவர்களுக்கு கௌரவமான மாகாணமாக இணங்காட்ட முன்வர
வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை அனைத்து மாகாணங்களிலும் கடமையாற்றும் உயரதிகாரிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு கடமை நேரத்தில் அணிய வேண்டிய உடைகள் பற்றிய விபரங்களை வழங்கி பொதுமக்கள் மத்தியில் கௌரவமான உடைகளை அணிந்து சேவையாற்றக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -