அஷ்ரப் ஏ. சமத்-
கொழும்பில் மத்தியதர குடும்பங்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் பொரளையில் (6) பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அமைச்சா் சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் 30 மாடிகளைக் கொண்ட 400 வீடுகளைக் கொண்ட ” எலியட் ரெசிடன்ஸ்” நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக 800 மில்லியன் ருபா செலவில் சீன அரசாங்கம் நிர்மாணப்பணிகளை மேற்கொள்கின்றன. கொழும்பில் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இங்கு உரையாற்றிய பிரதமா்
கொழும்பில் மேலும் 2 தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படும் அத்துடன் கொழும்பில் உள்ள முடுக்கு வீடுகள் அகற்றப்பட்டு அவ் வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு தொடா் மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். 100க்கணக்கான முடுக்கு வீடுகள் உள்ள பிரதேசம் வா்த்தகமையம் மற்றும் உல்லாச ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு கொழும்பில் நெறிசல் அற்ற பிரதேசமாக மாற்றப்படும் என பிரதம மந்திரி தெரிவிததாா்.