"ஹெல பொஜுன் ஹல" உணவகம் பதியத்தலாவ பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.


அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிதியுதவியுடனும், விவசாய அமைச்சின் நிதியுதவியுடனும் நிர்மாணிக்கப்பட்ட "ஹெல பொஜுன் ஹல" உணவகம் இன்று (29) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவினால் அம்பாறை மாவட்டத்தில் பதியத்தலாவ பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை,மட்டக்களப்பு,கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரயாணிகளின் நலன் கருதி 17 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அதிநவீன வசதிகளுடன் மலசலகூடம், தாய்ப்பால் ஊட்டும் பகுதி என பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடனும் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மொறவெவ,மட்டக்களப்பு,வாகரைக்கேணி மற்றும் கன்தளாய் போன்ற பகுதிகளில் "ஹெல பொஜுன் ஹல" உணவகம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் முதற்கட்டமாக இன்றைய தினம் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுவதாகவும் பயணிகள் போக்கு வரத்து அதிகார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வுணகத்தின் மூலம் பதியத்தலாவ பகுதியைச்சேர்ந்த 40 விவசாய குடும்பங்களுக்கு சுய தொழில் கிடைத்துள்ளதாகவும், அதன் மூலம் வாழ்வாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் எனவும் கிழக்கு மாகாணத்தில் பல சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜேவிக்ரமவும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -