யாழ் மாநகரசபைத் தேர்தலில் 13ம் வட்டாரத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 16 வாக்குகளால் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டிருந்த ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்கள் யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியேக இணைப்பாளராக 19-04-2018 முதல் நியமனம் பெற்றுள்ளார். இதற்கான நியமனக்கடிதம் முதல்வர் அவர்களினால் நேற்றையதினம் (19-04-2017) அன்று மாநகர முதல்வர் அலுவலகத்தில்வைத்து கையளிக்கப்பட்டது.
யாழ் மாநகர எல்லைக்குள் இவ்வாறான 12 இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் நலன்சார்ந்தே இந்நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்நியமனங்களின் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பில் முதல்வர் அலுவலகம் கருத்துக்கூறியிருக்கின்றது.
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மிக அடிப்படையான தேவையாக இருக்கின்ற மீள்குடியேற்றம் சார்ந்த விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடும், மக்களோடும் இணைந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுவதாகவும், இப்பதவியூடாக யாழ் முஸ்லிம் மக்களுக்காக நான் இதுவரை முன்னெடுத்த சேவைகளை மேலும் அர்த்தமுள்ளதாக ஒழுங்கமைக்க முடியும் எனவும் ஜனாப் நௌபர் அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்.