வடக்குமாகாணசபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரானஎன். கனகரட்ணம் விந்தன்தனுக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகள் முன்பள்ளிகளுக்கான புனரமைப்பு மற்றும் தளபாட கொள்முதல் என்பவற்றிற்காக ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளார்.
பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள்,பெற்றோர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளுக்கு மாகாணசபை உறுப்பினரை அழைத்துச் சென்று தங்கள் பாடசாலைகளின் தேவைகள் குறைகள் தொடர்பாக கலந்துரையாடியதைத் தொடர்ந்து, இத் தேவைகளின் முக்கியத்துவத்தைஅறிந்த மாகாணசபை உறுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் நிதிகளை ஒதுக்கியுள்ளார்.
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ். ஊ. புனிதஅந்தோனியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.வேலணைசரஸ்வதி வித்தியாலயம் பாண்ட் வாத்தியக் கருவிகள் கொள்வனவுக்காக ரூபாஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம்,யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.சுருவில் றோ.க.த.க பாடசாலை தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.சரவணைசின்னமடு றோ.க.த.க. பாடசாலைகணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
யாழ். அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபா எழுபத்துஐந்து ஆயிரம்,யாழ்.வேலணை மேற்குநடராஜ வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ்.பருத்தியடைப்பு கதிரேசானந்தா வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபாஐம்பது ஆயிரம்.
யாழ். கொழும்புத்துறை சென். ஜோசப்ஸ் வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம் பாடசாலை மதில் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம்,யாழ்.நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க. வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம்கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.அனலைதீவு தெற்கு அ.த.க. வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.அனலைதீவு வடலூர் த.க. வித்தியாலயம்; நிழற்படப்பிரதி இயந்திரம் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ். அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் விளையாட்டுஉபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்.
யாழ். சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.புங்குடுதீவுறோ.க.த.க. பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,யாழ்.வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,முல்.வவுனிக்குளம் பாலிநகர் குமாரசாமி வித்தியாலயம் சமையலறை நிர்மாணப்பணிகளுக்காக ரூபா இரண்டு இலட்சத்து ஐம்பதுஆயிரம்,யாழ். புனித மரியன்னைபாலர் பாடசாலைபாண்ட் வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்.
யாழ். புங்குடுதீவு மேற்கு காந்தி முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபாஐம்பது ஆயிரம்,யாழ். அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ்.ஒக்சிலீயம்; முன்பள்ளி,வேம்படிவீதி,யாழ்ப்பாணம் சிறுவர் பூங்காஅமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம்,ஊர்காவற்றுறை உப்புக்குளம் வீதி அண்ணா சனசமூகநிலைய முன்பள்ளிபாண்ட் வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபாஐம்பது ஆயிரம்,யாழ். அரியாலை சரஸ்வதி சனச மூகநிலைய முன்பள்ளிதளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ். புங்குடுதீவு நண்பர்கள் முன்பள்ளிசுற்றுமதில் அமைக்கும் பணிகளுக்காக ரூபா எழுபத்துஐந்து ஆயிரம்.
நயினாதீவு அண்ணா சனசமூகநிலைய முன்பள்ளி சிறுவர் பூங்காஅமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம், யாழ்.எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ்.அனலைதீவு நாவலர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ். வேலணை வங்களாவடி மத்திய சிறுவர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,யாழ்.சின்னமடு மாதா முன்பள்ளிபுனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,கரம்பன் புனிததிரேசா (ஞானஒளி) முன்பள்ளிபுனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம் என ரூபாமுப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.