கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மற்றும் திறந்த மட்ட விவாதப்போட்டி நிகழ்வுகள் இன்று (19) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கலாசார உத்தியோகத்த ஏ.எல். பீர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடை பெற்ற மேற்படி நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பேரவை உறுப்பினர்கள், கிங்ஸ் இளைஞர் கழக உறுப்பினர்கள், சாட்டோ இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர் அணியினர் என நான்கு குழுக்கள் கலந்து கொண்டனர்.
நான்கு சுற்றுக்காளாக நடைபெற்ற இவ் விவாதப்போட்டியின் இறுதியில் மாவட்ட மட்ட போட்டியில் பங்கு பற்ற கிங்க்ஸ் அணியினர் தெரிவு செய்யப்பட்டனர்.
விவாதப் போட்டியின் நடுவர்களாக கோறளைப்பற்று பிரதேச செயலத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். ரியாஸ், அபிவிருத்தி உத்தியோகத்தரும் எழுத்தாளருமான எஸ்.எச். அரபாத், கவிஞர் எஸ். நழீம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.