கல்முனை ஸாஹிராவில் வரலாற்றுச் சாதனை!!!



ல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 13 மாணவர்கள் 9A சித்திகளையும், 17 மாணவர்கள் 8A சித்திகளையும் , 15 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர்.

இது கல்லூரி வரலாற்றில் பெற்ற அதி கூடிய சித்திகளாகும் குறிப்பாக அதுகூடிய 9A's ஆகும். இந்த வெற்றிக்காக ஈடுபாட்டுடன் உழைத்த பகுதித்தலைவர் TM. ரிபாய், பிரதி பகுதி தலைவர்களான MBM. நிஷ்பர் மௌலவி, MI. முராத், வகுப்பாசிரியர்கள், பிரதி, வலய அதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்களுக்கும் கல்லூரியின் அதிபர் MS. மொஹமட் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்லூரியின் அதிபர் இந்த சாதனை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நிலைநாட்டப்பட்டதாகவும் இறுதி கட்டத்தில் இந்த வெற்றிக்கு உதவிய TM. ரிபாய் ஆசிரியருக்கு தனது விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார். ஒரு தனி ஆண் பாடசாலையான கல்முனை ஸாஹிரா கல்லூரி தேசியரீதியில் ஆண் மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடையும் இந்த தருணத்தில் ஒரு முன்னேற்ற பாதையில் செல்வது கல்லூரியின் விஷேடத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -