கல்முனை மாநகரசபை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியது!!!

கல்முனையின் முதல்வரானார் ரக்கீப், பிரதிமுதல்வர் காத்தமுத்து கணேஷ் 
ம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு (2) திங்கட்கிழமை பி.ப 2.30மணியளவில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற முதல்வர் மற்றும் பிரதி முதல்வருக்கான போட்டியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி அபூபக்கர் முஹம்மட் ரக்கீப் முதல்வராகவும் தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த காத்தமுத்து கணேஷ் பிரதி முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இன்றைய முதல்நாள் அமர்வில் சாய்ந்தமருது சார்பில் சுயட்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒன்பது உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினரும் சபைக்கு பிரசன்னாமாக வில்லை.
முதல்வர் தெரிவின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளருக்கு வாக்களித்திருந்த போதிலும் அந்தக்கட்சி சார்பில் பிரதி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட உறுப்பினருக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்குகள் அளிக்கப்படவில்லை. மாறாக தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்டவருக்கே வாக்களித்து தெரிவு செய்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அவர்கள் தெரிவாகவில்லை.
கல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும். அவர்களில் பெண்கள் தொகை 10.

இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.

இதில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா) 12ஆசனங்கள் சுயேச்சைக்குழு4(சாய்ந்தமருது) 9ஆசனங்கள் தமிழரசுக்கட்சி(த.தே.கூ) 7ஆசனங்கள் அ.இ.ம.கா 5ஆசனங்கள் தமிழர்விடுதலைக்கூட்டணி 3ஆசனங்கள் தேசியகாங்கிரஸ் 1ஆசனம் நல்லாட்சிக்கான தேசியமுன்னணி 1ஆசனம் ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம் சுயேச்சைக்குழுஇரண்டு 1ஆசனம் சுயேச்சைக்குழுமூன்று 1ஆசனம் என அமைந்துள்ளது. 








.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -