என் இனிய சாரிப் போராளிகளே
+++++++++++++++
Mohamed Nizous
சாரி காக்கப் போராட
சாரி சாரியாய் செல்வாரடி
பாரு அதில் வேடிக்கை
பாதிப்பேர் உடை சல்வாரடி
இனம் உடை காக்கவென
எழுந்து போராடும் ஆசிரியரே!
டெனிம் டீ சேர்ட் அணிந்து வர
சனம் கண்டு ஆ..சிரியாரா?
வெள்ளைக் கவுண் அணிவது
வேதத்தில் உள்ளதாமோ?
வெள்ளைக்காரன் சொன்ன உடை.
விரும்புவது நல்லதாமோ?
பெ'ஷண் முக'ப் பூச்சுக்கள்
பெரிய பொட்டு ஸ்டிக்கர்கள்
அசல் கலாச்சாரம் இதுதானா?
அபாயா மட்டும் பிரச்சினையா?
இந்துக்களுக்கு மட்டுமென்று
எழுதி இருக்கும் மாயமென்ன?
எந்த கிறிஸ்தவ முஸ்லிமுக்கும்
இடமில்லை என்ற நியாயமென்ன?
சாகிறாவில் பாத்திமாவில்
சாரி உடுத்து பொட்டு வைத்து
சாகிற வரை படிப்பிக்கிறார்
சமாதானமாய் இருக்கிறோம்
உடைக்காகக் கோஷமிட்டு
உடைக்காதே ஒற்றுமையை
அடைக்காதே நல்லுறவை
தடுக்காதே பிறர் உரிமை.