இரண்டாம் குறுக்குத்தெரு, நிந்தவூர் 8 ஆம் பிரிவினைசேர்ந்த சகோதரர் பைத்துல்லாஹ் கமால் அஹமட் அவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றார்.
இவர் ஜனாப் முஹம்மத்தம்பி பைத்துல்லாஹ் ஆதம்பாவா சித்தி சபியா தம்பதிகளின் நான்காவது புதல்வனாவார்.தனது ஆரம்ப கல்வியினை கமு/கமு/அல் மினா வித்தியாலயத்திலே ஆரம்பித்த இவர் அப்பாடசாலையிலேயே எட்டாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் இணைந்து 2011 ஆம் ஆண்டு கலைப்பிரிவில் பரீட்சை எழுதி சித்தி எய்தினார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு நேரடியாக தெரிவுசெய்யப்பட்டு வெற்றிகரமாக தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட இவர் சிறப்பு சட்ட இளமாணி (LLB HONS) பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கொழும்பிலே பிரபல சட்டத்தரணி ஒருவரின்கீழ் தனது பயிற்சிகளினைமேற்கொண்டிருந்தார்.
தாம் பிறந்த பிரதேச மக்களிற்கு உதவ வேண்டுமென்ற இலக்கினை மையமாகவைத்து தற்போது கல்முனை மேல்நீதிமன்றத்திலும்,சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாக பணிபுரிகின்றார்.
இவர் தனது பல்கலைக்கழக சட்டக்கற்கையுடன் மட்டும் நின்றுவிடாமல் இராஜதந்திரம் மற்றும் உலக விவகாரங்கள் (Diploma Diplomacy and World Affairs) போன்ற பல்வேறுகுறுகிய,நீண்டகால கற்கைநெறிகளினையும் பூர்த்தி செய்துள்ளார்.
மனித உரிமைகள் பற்றிய தலைப்பின் கீழ் தனது முதுமானி (MASTERS) பட்டப்படிப்பை கொழும்பு பகலைக்கலகத்தில் தொடருகின்ற இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் ஒரு பகுதிநேர விரிவுரையாளராகவும் கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அல் மினா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தனது இல்லத்திலேயே தனது காரியாலயத்தை துவக்கியிருக்கின்ற இவர் மனித உரிமைகள்,மற்றும் சருவதேச விவகாரங்களினை தனது ஆய்வுத்தொனியாக கொண்டுள்ளார். வளர்ந்துவரும் இளம் சட்டத்தரணி கமால் அவர்களுக்கு மிகப்பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்பது எம்மனைவரதும் நம்பிக்கையாகும்.தனது இளமைக்காலத்தில் பல தியாகங்களினை செய்து தமது பெற்றோரினது கனவினை நனவாக்கிய இவர் இன்னும் வெற்றிபெற வாழ்த்துகின்றோம்.