கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எமது மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான பெறுபேறுகளை மாணவர்கள் எடுத்துள்ளனர். இதற்கு நேர்மாறாக க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்த பெறுபேறுகளையே எமது மாணவர்கள் பெற்றுள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட காவத்தமுனை அல்-அஸார் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு விளையாட்டுக் கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2018.04.15ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் எமது விகிதாசாரத்திற்கு ஏற்ப நிருவாகத் துறையிலுள்ள பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் கல்வித் துறையில் நாம் இன்னும் முன்நோக்கிச் செல்ல வேண்டியதொரு தேவைப்பாடு வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்திற்கு இருக்கின்றது.
சமூகத்தில் துடிப்புள்ள இளைஞர்கள் ஒன்றுசேரும் இடமாக விளையாட்டுக் கழகங்கள் இருந்து வருகின்றன. அவ்வாறான இளைஞர்கள் சமூகத்தின் நன்மைகருதி பல மாற்றங்களை கொண்டு வரவேண்டுமென்று முற்படுகின்றபோது அல்லாஹ்வின் உதவியுடன் அதற்கான வெற்றி கிடைக்கும். என தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் அல்-அஸார் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.