விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ - மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டம் திறந்துவைப்பு

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

நுராதபுர மாவட்டம், கெக்கிராவ பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக விஸ்தரிக்கப்பட்ட நிகவெவ - மாமினியாவ குடிநீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
15 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெற்றுள்ள இந்த குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 350 குடும்பங்கள் பயனடையவுள்ளன. சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான திட்டங்களின் மூலம் சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தை விஸ்தரிப்பதுடன், கட்சி ஆதரவாளர்களுக்கும் கட்சிக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “வீட்டுக்கு வீடு மரம்” செயற்திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைத்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -