இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி எஸ் பி பிளஸ் வரிசலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.GSPபிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்குஅத்தியவசியமானது என்றாலும் அமெரிக்க முன்வைக்கும்அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனைபெற்றுக்கொள்வது முட்டாள்த்தனமான செயற்பாடாகும்.
நாட்டின் முன்னேற்றம் முக்கியமானது அதற்காக நாட்டின்இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளைஅனுமதிக்க முடியாது.
முன்னர் நாம் ஜி எஸ் பி வரிச் சலுகை பெற்றிருந்தோம்ஆனால் இந்த அரசாங்கம் கொடுத்துள்ள அளவுக்குவாக்குறுதிகள் இருபோதும் வழங்கப்படவில்லை.போர் குற்றநீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலகம் தலையீடு செய்யக்கூடியபல்வேறுபட்ட வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் அள்ளிவழங்கியுள்ளது.இது நாட்டின் இறையாண்மைக்குதாக்கத்தை ஏற்படுத்த கூடியவைகளாகும்.
மேற்குலகத்திற்கு அடிமைப்பட்ட நாடுகள் சீரழிந்தவரலாறுகளே உள்ளன.அவ்வாறு அடிமைப்பட்ட நாடுகள்முன்னேற்றம் கண்டதாக வரலாறுகள் இல்லை. நாம்வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும். நாட்டைஅபிவிருத்தி செய்கிறோம் என்ற பேரில் நாட்டின் அரசியல்விவகாரங்களில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்குஅனுமதி வழங்குவது நாட்டை அழிவுக்கு இட்டுச்செல்லும் எனகுறிப்பிட்டார்.